search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் வாரிய அலுவலகம்"

    கூடலூரில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த மின்வாரிய அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. #Powerboardoffice

    கூடலூர்:

    தேனி மாவட்டம், கூடலூரில் மின்வாரிய அலுவலகம் கடந்த 2011-ம் ஆண்டு முதல் காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த நிலையில் கடந்த 2013-ல் கட்டிட உரிமையாளர் இந்த இடம் சொந்த பயன்பாட்டுக்கு வேண்டும் எனக்கூறி மின்வாரிய அலுவலகத்தை காலி செய்யக்கோரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதிகாரிகளும் மின்வாரிய அலுவலகத்தை மாற்ற பல முறை தவணைகேட்டு இருந்தனர். இருப்பினும் அலுவலகத்தை மாற்ற அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்ததாக கூறி கட்டிட உரிமையாளர் கடந்த 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அலுவலகத்தை பூட்டினார்.

    இதனால் பணிக்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல முடியாமல் வெளியே தவித்தனர். பொதுமக்களும் அலுவலகம் பூட்டிக் கிடந்ததால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் அவதியடைந்தனர். பின்னர் இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கட்டிட உரிமையாளாருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது 3 நாட்களுக்குள் அலுவலகத்தை மாற்றி கட்டிடத்தை உரிமையாளரிடம் ஒப்படைப்பதாக உறுதிமொழி அளித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முதல் மேலக்கூடலூர் 16-வது வார்டு வாட்டர் டேங் தெருவில் உள்ள புதிய கட்டிடத்திற்கு மின் வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே, கூடலூர் நகர பொதுமக்கள் அனைவரும் பயன் அடையுமாறு மின்வாரிய உதவி பொறியாளர் பாண்டியன் தெரிவித்து உள்ளார். #Powerboardoffice

    பொள்ளாச்சி அருகே மின் வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி துணை மின் நிலைய வளாகத்தில் மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் விவசாயிகள் தக்கல் முறையில் மின் இணைப்பு பெற காசோலைகளுடன் விண்ணப்பம் அளிக்க வந்து இருந்தனர்.

    சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் 60 விவசாயிகளிடம் மட்டும் விண்ணப்பத்தை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு உருவானது.

    தகவல் கிடைத்ததும் ஆழியாறு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். #tamilnews
    ×